உலகின் மிக ஆபத்தான பைக் பந்தயம் - காடு,மலைப்பாதையில் நடக்கும் போட்டி

வீரர்களுக்கு சவால் அளிக்கும் பந்தயம்

Update: 2018-09-07 19:12 GMT
உலகின் மிகவும் கடினமான, ஆபத்தான பைக் பந்தயம்.. அப்படி என்ன விசேஷம் என்றால், இந்தப் பந்தயம் சாலையில் நடைபெறாது.கரடு முரடான பாதையில் தொடங்கி, மலையில் பயணம் செய்து, காடுகள் வழியாக பந்தயம் நடைபெறும்.4 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பந்தயத்தின் தூரம் வேறுப்படும். பலத்த பாதுகாப்பு உபகரணங்களோடு தான் இந்த பந்தயத்தை மேற்கொள்ள முடியும். உயிரை பனைய வைக்கும் இந்தப் போட்டியின் முக்கிய அம்சமே சாகசம் தான்மோட்டார் சைக்கிளிலேயே பிறந்து, மோட்டார் சைக்கிளிலேயே வளர்ந்தவர்களால் மட்டும் தான் இந்த பந்தயத்தில் பங்கேற்க முடியும். ஏன் என்றால் அந்த அளவுக்கு வீரர்களின் திறமையை இந்தப் பந்தயம் சோதினை மேற்கொள்ளும். உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று போட்டியாளர்களை ஏ,பி,சி. என்று திறமை, அனுபவம் அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்படுவார்கள். பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் HARE SCRAMBLE பந்தயம் மிகவும் பிரபலம். இந்த பந்தயத்தில் மிகவும் பிரபலமான வீரர் இங்கிலாந்தை சேர்ந்த GRAHAM JARVIS.. கடைசியாக ஆஸ்திரியாவில் நடைபெற்ற பந்தயத்தில் இவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 
Tags:    

மேலும் செய்திகள்