X-க்கு போட்டியாக கூவிய 'கூ'... பாதாளத்தில் கதறும் பரிதாபம்... கண்ணீரில் ஊழியர்கள்

Update: 2024-04-26 14:24 GMT

எக்ஸ் தளத்திற்கு போட்டியாக பெங்களூருவில் தொடங்கப்பட்ட நிறுவனமான கூ, கடும் நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது.

2019 நவம்பரில், அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிதவட்கா ஆகிய இரண்டு தொழில்முனைவோர்களினால் தொடங்கப்பட்ட கூ செயலி, எக்ஸ் தளத்திற்கு மாற்றாக

முன் வைக்கப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இதில் கணக்கு தொடங்கினர். இதுவரை 416 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ள கூ நிறுவனம், தொடர் நஷ்டங்களினால் கடும் நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. 2021-22இல் வெறும் 14 லட்சம் ரூபாய் மட்டும் ஈட்டிய கூ நிறுவனம், 197 கோடி ரூபாய் நஷ்டமடைந்தது. கூ செயலியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 2023 ஜூனில் 72 லட்சமாக இருந்து, 2024 மார்ச்சில் 27 லட்சமாக 62 சதவீதம் சரிந்துள்ளது. நிதிப் பற்றாகுறையினால் 40 சதவீத சம்பள குறைப்பை செயல்படுத்திய கூ நிறுவனம், ஏப்ரல் முதல் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்தி வைத்துள்ளது. வெர்சீ இன்னவோசன் நிறுவனத்துடன் கூ நிறுவனத்தை இணைக்க நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்