கிரேன் மூலம் வந்த ராட்சத மாலை... ஜெயவர்தனுக்கு கிரீடம் அணிவித்து கவுரவிப்பு

Update: 2024-04-17 10:19 GMT

#aiadmk | #electioncampaign

கிரேன் மூலம் வந்த ராட்சத மாலை... ஜெயவர்தனுக்கு கிரீடம் அணிவித்து கவுரவிப்பு

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவிலம்பாக்கம் பகுதிக்கு சென்றபோது ஹைட்ராலிக் லிப்டில் இருந்து மலர்களை கொட்டியும், சாலையின் இருபுறத்திலும் பெண்கள் மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 500 கிலோ எடையுள்ள அண்ணாச்சி, ஆரஞ்சு பழங்கள் அடங்கிய மாலையை கிரேன் மூலம் அணிவித்தனர். மேலும் ஜெயவர்தனுக்கு தலையில் கிரீடம் அணிவித்து, கோயிலில் சிறப்பு பூஜை செய்த கலசத்தை வழங்கியும் கவுரவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்