தடுப்பூசி ஜி.எஸ்.டி-யை குறைக்க கோரிக்கை - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதமாக நிர்ணயிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-05-13 11:12 GMT
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுகள் மருந்துகளை கொள்முதல் செய்வதால் இவ்வாறு ஜி.எஸ்.டி-யிலுருந்து  விலக்கு அளிக்க வேண்டுமென கூறியுள்ளார்.கொரோனா காலத்தில் மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய மேலும் சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அதன்படி நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் மேல்வரி விதிப்பால், மத்திய அரசுக்கு  கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்கு பகர்ந்தளிக்கப்படவில்லை எனவும், இதனால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி உதவி அளிக்க வேண்டுமெனவும் இந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.மேலும் செலவினங்களை சமாளிக்க கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 3 சதவிகிதம் என்ற அளவில் இருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்த வேண்டுமெனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்