பாஜகவில் இணைகிறாரா சவுரவ் கங்குலி?

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-03-04 02:45 GMT
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் சிகிச்சை பெற்று திரும்பினார் சவுரவ் கங்குலி. இதனிடையே அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக இது தொடர்பான பேச்சுகள் அதிகம் இருந்த நிலையில் மேற்கு வங்கத்தில் வரும் 7ஆம் தேதி மோடி தலைமையிலான கூட்டத்தில் கங்குலி கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தின் போது அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்