"தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு தாமதமாகும்" - பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீநிவாஸ் தகவல்

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இன்று மாலைக்கு மேல் ஆகலாம் என்று அந்த மாநில தேர்தல் அதிகாரி ஸ்ரீநிவாஸ் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-11-10 10:58 GMT
பீகார் மாநிலத்துக்கு 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஆகலாம் என்று பீகார் மாநில தேர்தல் அதிகாரி  ஸ்ரீநிவாஸ் கூறி உள்ளார். பதிவாகி உள்ள 4 புள்ளி 10 கோடி வாக்குகளில் 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டு உள்ளதாகவும், இதனால், முடிவுகள் வெளியாவது இன்று மாலைக்கு மேல் ஆகலாம் என்று அவர் கூறி உள்ளார். கொரோனா தொற்றால் அதிக அளவு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறிய அவர், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 35 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்