பொதுத் துறை நிறுவனங்களை தரைவார்க்கும் பா.ஜ.க. அரசு - பிரதமர் மோடி அரசு மீது ராகுல்காந்தி சாடல்

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படிப்படியாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தாரை வார்த்து வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2020-07-27 04:27 GMT
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படிப்படியாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தாரை வார்த்து வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டு உள்ள ராகுல் காந்தி, 3 கட்டமாக பொதுத் துறை நிறுவனங்களை பா.ஜ.க. அரசு, தனியாருக்கு தாரைவார்ப்பதாக தெரிவித்துள்ளார்.  முதலில் அவை இன்றைய போட்டிச் சூழலுக்கு உகந்தது இல்லை என பிரச்சாரம் செய்வது, இதற்கு ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது, பின்னர் அற்ப விலைக்கு விற்பது என பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதாக பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தான் தற்போது. பல உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாமல் அண்மைக் காலமாக ஊடகங்களில் செய்தி வருவதாகவும் ராகுல் காந்தி தமது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்