ஊரடங்கால் ஏழைகள், சிறு நிறுவனங்கள் பாதிப்பு: "உடனடியாக உதவாவிட்டால் பொருளாதார பேரழிவு" - அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

ஏழைகள், சிறு நிறுவனங்களுக்கு உதவிட, உடனடியாக மத்திய அரசு முன்வராவிட்டால், பொருளாதார பேரழி​வு தவிர்க்க இயலாததாகி விடும் என, ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

Update: 2020-05-23 08:22 GMT
* 2 மாதமாக தொடரும் கொரோனா ஊரடங்கால் நாட்டில் ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கு மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

* சோனியா காந்தி தலைமையில் 22 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உடனடியாக மத்திய  அரசு உதவ முன்வராத நிலையில், நாடு மிகப் பெரும் பொருளாதார பேரழிவை சந்திக்கும் அவல நிலை உருவாகும் என எச்சரித்துள்ளார். 

* ஏழை, எளிய மக்களுக்கு மாதம் 7,500 ரூபாய், இலவச ரேசன் பொருள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். 

* மேலும், மக்களுக்கு இந்த நேரத்தில் தேவை  பண உதவி தான் என்றும், கடனுதவி அல்ல என்றும் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் திட்டத்தில் மக்களின் எதிர்பார்ப்புக்கு உரிய எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை என சாடியுள்ளார்.

* கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க அமலாக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு எதிர்பார்த்த பலனை தரவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

* இந்த 2 மாத ஊரடங்கால், கோடிக்காணக்கான மக்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிந்து உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

* இந்த நேரத்தில் இந்த பிரச்சனையை எழுப்புவது, கட்சி அரசியல் அல்ல என்றும், இது நாட்டின் நலன் சார்ந்தது என்றும் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, 

* தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், பல லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் கோரபிடிக்கு தள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்