"ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும்" - சிதம்பரம் கருத்து

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-08 08:53 GMT
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 4 புள்ளி 75 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருந்த நிலையில் நடப்பு அரையாண்டில் 5 புள்ளி 25 சதவீதத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்கி உள்ளதாக பா.ஜ.க. அரசு கூறி வருவது அப்பட்டமான பொய் என்றும் சிதம்பரம் சாடியுள்ளார். வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய துறைகள் 3 புள்ளி 2 சதவீதத்தில் தான் வளர்ச்சி அடைந்த வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனிமனித நிகர உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 3 சதவீதமாக உள்ள நிலையில், எந்தவித வருமான உயர்வும் இன்றி சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக  துணைவேந்தர் தமது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய  வேண்டும் என்றும் சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்