அறுவை சிகிச்சைக்காக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி - கமல்ஹாசனை நேரில் சந்தித்தார் ஸ்டாலின்

கடந்த 2016ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது, பொருத்தப்பட்ட டைட்டோனியம் கம்பி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

Update: 2019-11-22 19:20 GMT
கடந்த 2016ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது, பொருத்தப்பட்ட டைட்டோனியம் கம்பி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன், தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளார். இந்நிலையில், அவரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது,  பொருளாளர் துரைமுருகன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்