மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சிவசேனா எம்.பி. விலகல்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

Update: 2019-11-12 08:59 GMT
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா கடிதத்தை  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு 
ஆதரவு தேவையென்றால் அக்கட்சி பாஜக  கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிபந்தனை விதித்திருந்தார். இதையடுத்து சிவசேனா கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த் 
தாம் வகித்து வந்த  மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை  பிரதமரின் பரிந்துரைப்படி குடியரசு தலைவர் ஏற்று கொண்டதாக ராஸ்டிரபதி பவன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அரவிந்த் சாவந்த் பொறுப்பு வகித்த  கனரக தொழில் துறையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்