"புதுச்சேரியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்" - பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரியில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-25 11:00 GMT
புதுச்சேரியில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஊசுட்டேரி, பாகூர் ஏரி உட்பட பல்வேறு ஏரிகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில், நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநிலத்தில் தரமான குடிநீரை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்