அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-22 15:46 GMT
உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் ராகுல்காந்தியின் வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள படிப்பு மற்றும் நிறுவனம் நடத்தியது தொடர்பான விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாக சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல்காந்தி மனுவை இன்று பரிசீலித்த, அமேதி தேர்தல் நடத்தும் அதிகாரி, சுயேட்சை வேட்பாளரின் புகாரை, நிராகரித்துள்ளார். மேலும், அமேதி தொகுதியில், ராகுல்காந்தியின் வேட்பு மனு ஏற்கப்பட்டள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்