ஜன சேனா கட்சியில் இணைந்தார் ராமமோகன ராவ்

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜனசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

Update: 2019-02-12 03:07 GMT
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த நிகழ்வில் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் முன்னிலையில் ராம மோகன ராவ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கட்சியில் அரசியல் ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தலைமை  செயலாளராக இருந்தவர் இவர். கட்சியில் இணைந்த பிறகு அவர் பேசுகையில், ஒரு நல்ல அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்பியதாகவும், பவன் கல்யாணை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்பது ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பு என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்