பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்க வேண்டும் - ஸ்டாலின்
பதிவு: செப்டம்பர் 03, 2018, 02:32 PM
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்குமாறு மத்திய அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையிலும், வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய் மதிப்பை  சரி செய்ய, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபோல, தமிழக அரசும் விற்பனை வரியைக் குறைக்காமல் இருப்பதும் மிகவும் பொறுப்பற்ற செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த கலால் வரியை குறைத்திட, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.