கர்நாடக அரசு வழங்கிய காசோலைகளில் குளறுபடி

கர்நாடகாவில் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Update: 2022-01-21 13:41 GMT
கர்நாடகாவில் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகாவில் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான காசோலைகளை அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் யாதகிரி மாவட்டத்தில்  நிவாரண நிதிக்காக வழங்கப்பட்ட காசோலைகளை சம்பந்தப்பட்டவர்கள் வங்கியில் செலுத்தியுள்ளனர். அப்போது, காசோலைகளில் தொகை, தேதி போன்றவற்றில் பிழை இருப்பதாக கூறி வங்கிகள் அதை திருப்பி அனுப்பியுள்ளன.  இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியபடுத்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்