"187 லட்சம் லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்" - பீகார் அமைச்சர் சுனில் குமார் தகவல்

கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 700 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-11-06 02:41 GMT
பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு  சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி கடந்த இரண்டு தினங்களில் 23க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாநில அமைச்சர் சுனில்குமார், உள்ளூர் மட்டத்தில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறினார். மது விலக்கை அமல்படுத்த, பீகார் அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இது வரை 187 லட்சம் லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சுனில்குமார் கூறினார். இவ்விவகரத்தில் தொடர்புடைய 3 லட்சம் பேர் மற்றும் 60,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை அரசு அதிகாரிகளும் 700க்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்