இந்தியாவில் மரபணு மாற்ற அரிசியா? - மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் விளக்கம்

இந்தியாவில் இருந்து மரபணு மாற்றப்பட்ட அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.

Update: 2021-10-21 13:49 GMT
இந்தியாவில் இருந்து மரபணு மாற்றப்பட்ட அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கு, நடப்பாண்டில் மட்டும் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், சுமார் ஒரு கோடியே 8 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா...

ஆனால் ஏற்றுமதி அரிசியில் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 21ஆம் தேதி பிரான்ஸில் நடத்தப்பட்ட ஆய்வில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது

குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 500 டன் அரிசி, மாவாக அரைத்து பயன்படுத்தியதாகவும், 

அதனை பரிசோதனை செய்த போது மரபணு மாற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனால், பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 144 டன் அரிசியை திரும்ப பெறப்படுவதாக அறிவித்தது ஐரோப்பிய கமிஷன்.

இது மற்ற நாடுகளின் ஏற்றுமதியை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய, ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் விவரங்களை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தியது

இதில் மகாராஷ்ட்ரா மாநிலம் அகோலாவில் இருந்து மொத்த விற்பனையாளர் மூலம் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவந்தது

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அரிசி மரபணு மாற்றம் செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது

இந்தியாவில் மரபணு மாற்ற அரிசி விளைவிக்கப்படவில்லை எனவும் உறுதிப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் சரக்குகளை பிரித்து மாவாக மாற்றும் போது, கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் மத்திய அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது

எந்த வகையில் மரபணு மாற்றப்பட்டது என்ற ஆதாரத்தை ஐரோப்பிய கமிஷன் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் 65,000 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால், அரிசி மரபணு மாற்றம் செய்யப்பட்டதா என வேளாண் ஆராய்ச்சி கழகம், மரபணு பொறியியல் நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்