"7000 உயிரிழப்பு கொரோனா கணக்கில் இல்லை" - கொரோனா உயிரிழப்புகள் மறுஆய்வில் தகவல்

கேரளாவில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்பான மறுஆய்வில், 7 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள், கொரோனா கணக்கில் வரவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-09-25 12:54 GMT
கேரளாவில்  நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகளை மறைத்ததாக  குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து,மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டு  மற்ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா உயிரிழப்பு கணக்கில் சேர்க்கப்படாத மேலும்,  7,000க்கும் மேற்பட்ட  உயிரிழப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு  சுகாதாரத்துறையிடம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சுகாதாரத் துறை அதை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனிடையே, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்பாக மறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என,  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், கேரளா சுகாதாரத் துறையின் புள்ளி விவரங்களுக்கும், கேரளா மிஷனின் புள்ளி விபரங்களுக்கும் இடையே  7316 உயிரிழப்புகள் வித்தியாசம் ஏற்படடுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்தது.


Tags:    

மேலும் செய்திகள்