நடப்பாண்டு கோதுமை கொள்முதல் 10% அதிகரிப்பு - பிரதமர் மோடி

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதியிதவி திட்டத்தின் கீழ், 8 வது தவணையை வழங்கும் திட்டத்தை , பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-14 11:47 GMT
விவசாயிகளுக்கான பிரதமரின் நிதியிதவி திட்டத்தின் கீழ், 8 வது தவணையை வழங்கும் திட்டத்தை , பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 19 ஆயிரம் கோடி ரூபாய், நாடு முழுவதும் உள்ள 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் இன்று வரவு வைக்கப்படுவதாக பிரதமர் பெருமிதம் பொங்க தெரிவித்து உள்ளார். முதல் முறையாக மேற்குவங்கத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த திட்டத்தின் பலனை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்திலும், விவசாயிகள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் விளைச்சலில் சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறைந்த பட்ச ஆதார விலையை தமது அரசு ஆண்டுதோறும் உயர்த்தி வருவதாகவும், கடந்தாண்டை விட இந்தாண்டு கூடதலாக 10 சதவீதம் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்