பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,13,143 கோடி வசூல்

2021 ஆம், ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 143 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-02 08:08 GMT
2021 ஆம், ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 143 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. 


இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி 21 ஆயிரத்து 92 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி 27 ஆயிரத்து 273 கோடியும் அடங்கும். ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி 55 ஆயிரத்து 253 கோடியும் செஸ் வரி 9 ஆயிரத்து 525 கோடி ரூபாயும் அடங்கும்.

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வழக்கமான பைசல் தொகையாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு 22 ஆயிரத்து 398 கோடியையும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு 17 ஆயிரத்து 534 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. பிப்ரவரியில் கிடைத்த மொத்த வருவாய்  மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு 67 ஆயிரத்து 490 கோடி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு 68 ஆயிரத்து 807 கோடி ரூபாயும், மத்திய மாநில அரசுகளுக்கு கிடைத்துள்ளது. 2020 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பிப்ரவரி மாத வருவாய் 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்