ஹோப் விண்கலம் செவ்வாய் சுற்று பாதையை இன்று அடைகிறது

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பிய ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கி வருகிறது.

Update: 2021-02-09 04:44 GMT
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பிய ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கி வருகிறது. ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ராக்கெட் மூலம் ஹோப் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி ஐக்கிய அரபு அமீரகம் சாதனை படைத்தது . 7 மாத கால பயணத்திற்கு பின் ஹோப் விண்கலம் இன்று இரவு ஏழேமுக்கால் மணியளவில் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் நுழையும் என்று ஐக்கிய அரபு அமீரக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் செவ்வாய் கிரக ஆய்வு நாடுகள் வரிசையில் 
ஐக்கிய அமீரகமும் இணைந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்