"பிரதமர், குடியரசு தலைவர், ஆளுநர்கள் மதச்சார்பற்றவர்கள்" - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விளக்கம்

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் மதச்சார்பற்றவர்கள் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டி உள்ளார்.

Update: 2020-10-15 12:08 GMT
இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் மதச்சார்பற்றவர்கள் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டி உள்ளார். இந்துத்வா என்பது நமது மனதிலும், வாழ்க்கை முறையிலும் இருக்க வேண்டும் என்றும், அதேநேரத்தில் அரசியல் அமைப்பு சாசனப்படி நாடு, மதச்சார்பற்ற அடிப்படையில் இயங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர ஆளுநர், முதலமைச்சரின் மதச்சார்பற்ற தன்மை பற்றி  கேள்வி எழுப்பும் நிலையில், பிரதமரும், குடியரசுத் தலைவரும் ஆளுநர் மதச்சார்பு அற்றவரா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டும் எனவும் சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்