கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - தேசிய நீர் ஆணையம் தகவல்

கேரளாவில் தொடர்மழையால் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை, முகாம்களில் தங்க வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-08-07 02:46 GMT
தேசிய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், இதனால் இடுக்கி, இடமலையாறு அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயரும் எனவும் கேரள அரசு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்போரை மாற்று இடங்களில் தங்க  வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள், சாதாரண மக்கள் என நான்கு வகையாக பிரித்து முகாம்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது. கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேரள அரசு கேட்டுகொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்