காவல் மரணங்கள் - உச்சநீதிமன்றம் கவலை

அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

Update: 2020-08-05 12:08 GMT
இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கைகளை சுட்டிக்காட்டி, திலீப் கே. பாசு என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் 148 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு, காவல் நிலைய மரணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்