காஷ்மீரில் ஜெய்ஸ் இ முகமது இயக்க தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தளபதியாக செயல்பட்ட சாஜத் தாரை துணை ராணுவப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

Update: 2020-04-09 02:51 GMT
காஷ்மீரில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தளபதியாக செயல்பட்ட சாஜத் தாரை துணை ராணுவப்படையினர் சுட்டுக் கொன்றனர். குலாபத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் காஷ்மீர் போலீஸ் படையினர் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அதில், சாஜத் தாரை கொன்றதோடு, ஏகே ரக துப்பாக்கி மற்றும் 59 ரவுண்டு வரை சுடக்கூடிய துப்பாக்கி குண்டுகளையும் துணை ராணுவத்தினர் கைப்பற்றினர்.  

Tags:    

மேலும் செய்திகள்