டெல்லி : தலைமை செயலகத்தில் பொறுப்பேற்ற கோபால் ராய்...
டெல்லி வளர்ச்சி, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவியேற்ற கோபால் ராய், தலைமை செயலகத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லி வளர்ச்சி, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவியேற்ற கோபால் ராய், தலைமை செயலகத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். இனி மற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து அரசியல் விவகாரங்களுக்கான குழு கூடி முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.