சபரிமலையில் தரமற்ற உணவுகளை விற்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம்

சபரிமலையில் உள்ள உணவகங்களில் தினமும் சோதனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-02 12:06 GMT
சபரிமலையில் உள்ள உணவகங்களில் தினமும் சோதனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தேவசம் போர்டு சார்பாக சன்னிதானத்தில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் தனியார் உணவகங்களும் சபரிமலையில் உள்ளது. இந்த உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு  மருத்துவ பரிசோதனை  நடத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் ஹெல்த் கார்டு கட்டாயமாக  வைத்திருக்க வேண்டும் என்றும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோல, சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் சபரிமலை செல்லும் வழியோர கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தினமும் சோதனை நடத்தி வருகின்றனர். கெட்டு போன உணவு பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கிடையே பக்தர்களுக்கு உதவும் வகையில் பெண்கள் அமைப்பான குடும்ப ஸ்ரீ நடத்தும் ஓட்டல்கள் பம்பை மற்றும் நிலக்கல்லில் திறக்கப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்