ஒன்றரை டன் மலர்களால் யாகம் - கூடைகளில் கொண்டுவரப்பட்ட மலர்கள்

திருப்பதி அடுத்த அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஒன்றரை டன் மலர்களால் பூஜை செய்யப்பட்டது.

Update: 2019-07-19 03:04 GMT
திருப்பதி அடுத்த அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஒன்றரை டன் மலர்களால் பூஜை செய்யப்பட்டது. வருடாந்திர மலர் யாகத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாளுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, துளசி, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மருவம், தாழம்பூ உள்ளிட்ட 12  வகையான ஒன்றரை டன் மலர்கள், கூடைகள் மூலம் பக்தர்களால் கொண்டுவரப்பட்டது. பின்னர், மலர்களை தூவி வேத விற்பன்னர்கள் யாகம் செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்