தீவிரவாதம் - இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை - பிரதமர் நரேந்திரமோடி

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-18 17:41 GMT
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோவுடனான சந்திப்பின் போது பேசிய பிரதமர், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அதை ஊக்குவிப்பதாக அமையும் என்றார். புல்மாவாவில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல், பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்துவிட்டதை காட்டுவதாகவும்,  உலக நாடுகள் ஒன்றிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்