RMK கல்லூரி ஆண்டு விழா.. ஆடல், பாடல் என களைகட்டிய நிகழ்ச்சிகள்

Update: 2024-05-03 03:57 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் 29ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு கல்வி குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார்.

தொடர்ந்து பரதநாட்டியம், ஆடல் பாடல், யோகா என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் பங்கேற்றார்.

இதையடுத்து பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்