காற்று மாசு - டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம்

டெல்லியில் காற்று மாசு பிரச்சினையை சரி செய்ய தவறியதாக டெல்லி மாநில அரசுக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-03 14:00 GMT
இந்த அபராத தொகையை டெல்லி அரசு அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோரிடமிருந்தும் வசூலித்து செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராத தொகையை செலுத்த தவறினால், டெல்லி அரசு மாதந்தோறும் 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டி வரும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்