வீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு....

வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-08 11:15 GMT
தமிழ் திரைப்பட இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வீரமாதேவி என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாதேவி என்ற ராணியின் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இதில் வீரமாதேவியாக நடிகை சன்னிலியோன் நடிக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் சன்னி லியோனின்  உருவப்படத்தை எரித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்