"விரைவில் உயிரி எரிபொருளின் பயன்கள் கிராமங்களை அடையும்" - பிரதமர் நரேந்திர மோடி

உயிரி எரிபொருளின் பயன்கள் விரைவில் அனைத்து கிராமங்களையும் சென்றடையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-10 09:43 GMT
டெல்லி விஞ்ஞான் பவனில் சர்வதேச உயிரி எரிபொருள் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உயி​ரி எரிபொருள்களின் பலன் அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும் என தெரிவித்தார். மக்களிடையே உயிரி எரிபொருளை விளம்பரப்படுத்த அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.  ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 12 நவீன சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதனால் ஒன்றரை லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், உயிரி எரிபொருளை பயன்படுத்தி, விவசாயிகள் வாழ்வில் புதிய புரட்சியை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். எத்தனாலை பயன்படுத்துவது மூலம் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்றும்,  வரும் 2022-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் பத்து சதவீதம் எத்தனால் கலக்கவும், 2030-க்குள் 20 சதவீதம் கலக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்