விஜய்யுடன் விஜயகாந்த்..! தி கோட்' படத்தின் மாஸ் அப்டேட்

Update: 2024-04-17 09:14 GMT

நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்தில் விஜயகாந்த் தோன்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்பத்தின் மூலம் மறைந்த விஜயகாந்தை படக்குழு மீட்டெடுக்க உள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முக்கிய காட்சியில் விஜயகாந்தை கொண்டு வர படக்குழு தன்னை அணுகியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும், நடிகர் விஜய் பிரேமலதாவை நேரில் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்