பிரபுஜெயராம் இயக்கத்தில் 'என்னங்க சார் உங்க சட்டம்' - அக். 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியீடு

'என்னங்க சார் உங்க சட்டம்' திரைப்படம் அக்டோபர் 29 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2021-10-27 11:56 GMT
இயக்குநர் பிரபுஜெயராம் இயக்கி உள்ள என்னங்க சார் உங்க சட்டம் திரைப்படம் அக்டோபர் 29 ஆம் தேதி  சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பிரபு ஜெயராம், தமிழக அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை போன்றது இந்த திரைப்படத்தின் கதைக்கரு என தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்