தீபாவளி போட்டியில் இருந்து விலகிய 'மாநாடு'

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-18 10:07 GMT
சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளியன்று மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டை தள்ளிவைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டி என்ற அடிப்படையில் பட வெளியீட்டை பார்ப்பதில்லை என்றும், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்பட கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால், மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாமல் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்