தனுஷ்-43 படப்பிடிப்பில் மாளவிகா மோகனன் - ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

மாஸ்டர், பேட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் தற்போது தனுஷின் 43ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

Update: 2021-07-21 06:46 GMT
மாஸ்டர், பேட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் தற்போது தனுஷின் 43ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களாக ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நடிகை மாளவிகா மோகனன் ஐதராபாத் சென்றுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஐதராபாத்தில் உள்ள சுவாரஸ்யமான இடங்களை கூறுங்கள் என்று ரசிகர்களிடம் பரிந்துரை கேட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்