பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மரணம்
பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 74.
வில்லனாக மிரட்டிவதிலும், காமெடியில் கலக்குவதிலும் கைதேர்ந்தவர் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி. தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு, வில்லனாக திரையில் போட்டி போட்டவர், தமிழில் தனுஷின் உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.