பாகிஸ்தானில் பால், இறைச்சி விலை கடும் உயர்வு

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இறைச்சி, பால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் பால், இறைச்சி விலை கடும் உயர்வு
x
பாகிஸ்தானின் பண மதிப்பு கடந்த சில வாரங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 123 ரூபாயில் இருந்து 158 ரூபாய் என்கிற அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் உணவுப் பொருட்கள், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அங்கு ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஆட்டிறைச்சி ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. அதேபோல், 1 லிட்டர் பெட்ரோல் 113 ரூபாய்க்கும், 1 லிட்டர் டீசல் 91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காஷ்மீர் பிரச்சினை காரணமாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்