"விடுதலைப் புலிகள் தோற்றதில் மகிழ்ச்சி" - முத்தையா முரளிதரன்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர‌ர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தோற்றதில் மகிழ்ச்சி - முத்தையா முரளிதரன்
x
சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது எனவும் ஆனால் அவர்கள் வாய்ப்பை தவறவிட்டு விட்டதாகவும் முரளிதரன் குற்றஞ்சாட்டி உள்ளார். பொதுஜன பெரமுனவின் அதிபர்  வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு  பேசிய போது  அவர் இவ்வாறு தெரிவித்தார். 2009இல் யுத்தம் முடிவிற்கு வந்து விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக சிறந்த நாள் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் அச்சத்தின் பிடியில் இலங்கை மக்கள் இருந்ததாகவும் விடுதலை புலிகள் அழிவிற்கு பிறகே அச்சமின்றி நடமாட முடிந்த‌தாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்