"காஷ்மீர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு கூடாது" - சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங் கோரிக்கை
2 நாள் அரசு முறை பயணமாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங், பாகிஸ்தான் சென்றுள்ளார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப்பின், இரு அமைச்சர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யெங், காஷ்மீர் விவகாரத்தை தங்கள் நாடு, உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார். காஷ்மீர் ஒரு பிரச்சினைக்குரிய நிலப்பரப்பு என குறிப்பிட்ட அவர், இதுதொடர்பான விவாதங்கள் ஐ. நா பாதுகாப்பு சபையில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். ஆகையால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது என்று வாங் யெங்
கேட்டுக்கொண்டார்.
Next Story