தேர்தல் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
x
ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கூகுள் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது  டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டதாக சர்ச்சையானது. இது குறித்து அந்த  நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர்  கூறிய தகவல்களை அடுத்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் தனது பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில்,  தங்கள் மீதான  குற்றச்சாட்டுகளுக்கு கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்