உயிரைக் கொல்லாத முட்டைகள் - ஜெர்மன் விஞ்ஞானிகள் சாதனை

கோழிப் பண்ணைகளில் ஆண் கோழி குஞ்சுகளை கொல்வதற்கு பதிலாக புதிய தீர்வினை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உயிரைக் கொல்லாத முட்டைகள் - ஜெர்மன் விஞ்ஞானிகள் சாதனை
x
கோழிப் பண்ணைகளில் ஆண் கோழி குஞ்சுகளை கொல்வதற்கு பதிலாக புதிய தீர்வினை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குஞ்சுகளை பொறிக்க வைப்பதற்கு அனைத்து முட்டைகளும் அடை வைக்கப்படுவதுதான் இதுவரை நடந்து வருகிறது.  இதில் ஆண் குஞ்சு பொறிந்தால், அதனால் கோழிப் பண்ணைகளுக்கு  பயனில்லை என்பதால் கொல்லப்படுகின்றன. இப்படி ஆண்டு தோறும் 600 கோடி ஆண் கோழிக் குஞ்சுகள் கொல்லப்படுகின்றனவாம்.  இதற்கு தீர்வு யோசித்த விஞ்ஞானிகள்,  முட்டைக்குள் இருப்பது  ஆண் கருவா, பெண் கருவா என கண்டறிந்து, பெண் கரு உள்ள முட்டைகளை மட்டுமே அடைகாக்கலாம் என தீர்வு கண்டுள்ளனர். இதற்கான தொழில்நுட்ப இயந்திரங்களையும் உருவாக்கியுள்ளனர். இதனால் ஆண் முட்டைகளை தனியாக விற்பனைக்கு அனுப்பலாம் என்றும் தீர்வு கண்டுள்ளதுடன், தற்போது  இப்படியான ஆண் முட்டைகள் ரெஸ்ப் எக்ட் என்கிற பெயரில் பெர்லின் நகரில் சில கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளதாம்

Next Story

மேலும் செய்திகள்