கோபத்தில் அண்ணனை கட்டையால் அடித்த தம்பி - தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 06:46 PM
ஈரோடு அருகே தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள கமலா நகரை சேர்ந்தவர் மனோகர். இவருக்கு சங்கர் மற்றும் தினேஷ் என இரண்டு மகன்கள். இருவரும் கூலித் தொழிலாளர்கள். இதில் சங்கருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். குடிபோதைக்கு அடிமையான சங்கர், தினமும் போதையில் வந்து குடும்பத்தில் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வந்த மூத்த மகன் சங்கர், தன் மனைவி மற்றும் தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே, தன் தந்தை மனோகரை சங்கர் அடித்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த இளைய மகன் தினேஷ், கட்டையை எடுத்து தன் அண்ணனை அடித்தார். 

இதில் படுகாயமடைந்த சங்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தம்பி தன்னை அடித்ததால் ஆத்திரத்தில் இருந்த சங்கர், தன் கோபத்தை எல்லாம் உள்ளுக்குள் வைத்துக் கொண்டு சிகிச்சையில் இருந்துள்ளார். உடல்நலம் தேறிய பின் வீட்டுக்கு வந்த அவர், நேராக தம்பி தினேஷை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆத்திரம் தீர குத்தினார். இதில் படுகாயமடைந்த தினேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். இவர்களின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வரவே, மூத்த மகன் சங்கர் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அவர்கள் உடனே சங்கரை வளைத்து பிடித்து கட்டி வைத்தனர். பின்னர் கொலையாளி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தன் தம்பியை அண்ணனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... 

தொடர்புடைய செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், கணவன் தற்கொலை - கிணற்றில் விழுந்த உயிரை மாய்த்து கொண்ட சோகம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், தமிழ்செல்வன் என்பவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 views

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் உள்ளது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

7 views

பிற செய்திகள்

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கலவையில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

10 views

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

21 views

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தாயின் கள்ளக்காதலனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்

புதுக்கோட்டையில் தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

34 views

ஆட்சியர் கூட்டத்தில் பேனரில் இந்தி - விவசாயிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது

9 views

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் - அமைச்சர் அன்பழகன் இன்று மாலை வெளியிடுகிறார்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

59 views

செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் முழக்கம் - 3 மணி நேரத்திற்கு மேல் தொடரும் அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் எழுந்ததாக தெரிகிறது.

562 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.