"தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசக் கூடும் என்றும், அதிகபட்சமாக 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை நிலவுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக 19 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்