ராயபுரம் மண்டலத்தில் தொடங்கும் "நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்"

சென்னையில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு அதிகளவில் இருக்கும் மண்டலங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் திட்டத்தை மாநகராட்சி இன்று தொடங்கியது.
x
சென்னையில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு அதிகளவில்  இருக்கும் மண்டலங்களில் வீடு வீடாக சென்று வெப்ப சோதனை பரிசோதனை செய்யும்  திட்டத்தை மாநகராட்சி இன்று தொடங்கியது. இந்த திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆகவும், சென்னையில் 7 ஆயிரத்து 672 ஆகவும் உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் வீடு வீடாக  வெப்ப  பரிசோதனை நடைபெற உள்ளது. வெப்ப சோதனையின் போது பொதுமக்களின் உடல்வெப்பம் குறித்துக் கொள்ளப்படுவதுடன், சளி, இருமல் போன்ற அறிகுறி குறித்தும் சோதனை செய்யப்படும்.

சோதனை மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், தனிமைப்படுத்தும் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் ஆகிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் ஏற்கனவே மண்டல வாரியாக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 500 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்