ஒசூர் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டு யானை கூட்டம்

ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள், தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டுள்ளன.
ஒசூர் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டு யானை கூட்டம்
x
ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள், தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டுள்ளன. சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தற்போது நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருப்பதால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். குட்டிகளுடன் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற காட்டு  யானை கூட்டத்தை பொதுமக்கள் ரசித்தப்படி வேடிக்கை பார்த்தனர்.

Next Story

மேலும் செய்திகள்