தமிழக தலைவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து : விருந்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு ?

2 நாள் பயணமாக சீன அதிபர் ஜி - ஜின்பிங், வருகிற 11 ம் தேதி, மாமல்லபுரம் வருவதையொட்டி, தமிழக தலைவர்களுக்கு விருந்து கொடுக்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
தமிழக தலைவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து : விருந்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு ?
x
2 நாள் பயணமாக சீன அதிபர் ஜி - ஜின்பிங், வருகிற 11 ம் தேதி, மாமல்லபுரம் வருவதையொட்டி, தமிழக தலைவர்களுக்கு விருந்து கொடுக்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இடம் மற்றும் நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநேரம், யார், யாருக்கு அழைப்பு விடுப்பது? என்பது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் பட்டியல் தயாரித்து வருகிறார்கள். இந்த பட்டியலில், நடிகர் ரஜினிகாந்த்தின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் இந்த விருந்து நிகழ்ச்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும் வெளியிடப்பட வில்லை.


Next Story

மேலும் செய்திகள்