"அரசு கேபிள் - மறைமுக உத்தரவு இல்லை" : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

அரசு கேபிள் டிவி கட்டண விவகாரத்தில், மறைமுக உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
அரசு கேபிள் டிவி கட்டண விவகாரத்தில், மறைமுக உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  திருப்பூர் குமரன் பிறந்தநாளையொட்டி, சென்னிமலையில் அவர் வாழ்ந்த இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்திந்த அவர், அரசு கேபிள் டிவி விஷயத்தில், மறைமுக கட்டணம் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பொதுமக்கள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், அனைத்துப் பகுதிகளுக்கும் அரசு கேபிள் டிவி செட்ஆப் பாக்ஸ் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்போது அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்